துண்டிக்கப்பட்ட மின்சாரம் - அதிமுகவினர் சாலை மறியல்

சூணாம்பேடு ஆரவல்லி நகரில் நடந்த அதிமுக ஆர்ப்பாட்டத்தின் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Update: 2024-02-05 03:10 GMT
சாலை மறியல்

சித்தாமூர் அருகே சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட ஆரவல்லி நகர் பகுதியில், தி. மு. க. , அரசை கண்டித்து, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ. தி. மு. க. , சார்பாக, நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ. தி. மு. க. , செயலர் ஆறுமுகம் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சூணாம்பேடு சுற்று வட்டார பகுதியில் நீரில் மூழ்கி சேதமான நெற்பயிருக்கு நிவாரணம் வழங்கப்படாததற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

பல்லாவரம் தி. மு. க. , - எம். எல். ஏ. , கருணாநிதியின் மகனும், மருமகளும், வீட்டில் வேலை செய்த இளம்பெண்ணை வன்கொடுமை செய்ததை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. கழக அமைப்புச் செயலர் முருகுமாறன், மதுராந்தகம் எம். எல். ஏ. , மரகதம் ஆகியோர் பங்கேற்று, கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருந்த போதே, திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அ. தி. மு. க. , வினர், சூணாம்பேடு மதுராந்தகம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதனால், சிறிதுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் பேச்சு நடத்தி, மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டதை அடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது

Tags:    

Similar News