கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 21.12.2023 மின்தடை அறிவிப்பு பகுதிகள்

பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுர்த்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Update: 2023-12-20 03:37 GMT
மின் நிறுத்தம் 
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 21.12.2023 மின்தடை அறிவிப்பு பகுதிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது அதன் அடிப்படையில் செயற்பொறியாளர் இந்திரா அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இந்த அறிவிப்பில் அவர் கூறியிருப்பதாவது. கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம், போச்சம்பள்ளி கோட்டம் - போச்சம்பள்ளி 110/33/11 KV பண்ணந்தூர் 33KV துணை மின் நிலையம், மத்தூர் 33/11 KV துணை மின் நிலையம், ஊத்தங்கரை 110/33/11KV துணைமின் நிலையம் மற்றும் குன்னத்தூர் 33/11 KV துணை மின் நிலையங்களில் 21. 12. 2023 அன்று மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அன்று காலை 09. 00 மணி முதல் மாலை 2.00 மணிவரை, மேற்படி மின் நிலையத்திலிருந்து மின்சாரம் வழங்கப்படும் பகுதிகளில் மின்சார இருக்காது என போச்சம்பள்ளி செயற்பொறியாளர் இந்திரா தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News