செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா் வடகரையில் நாளை மின்தடை

செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா்வடகரை துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-02 08:03 GMT
பராமரிப்பு பணிகள் 

தென்காசி மாவட்டம் செங்கோட்டை, சுரண்டை, சாம்பவா்வடகரை உப மின்நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் சனிக்கிழமை (பிப்.3) மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தென்காசி கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: இதனையடுத்து தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜா்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூா், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம் பாறை, திரவியநகா், ராமச்சந்திர பட்டணம், மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப்பிள்ளை வலசை, பெரிய பிள்ளை வலசை, பிரானூா், வல்லம், கற்குடி, புளியரை, தெற்கு மேடு, பூலாங்குடியிருப்பு, கட்டளை குடியிருப்பு, சுரண்டை, இடையா் தவணை, குலையனேரி, இரட்டைக் குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வாடியூா், ஆனைக்குளம், கரையாளனூா், அச்சங்குன்றம், சாம்பவா் வடகரை, சின்னத்தம்பி நாடானூா், பொய்கை, கோவிலாண்டனூா், கள்ளம்புளி, எம்சி.பொய்கை, துரைச்சாமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.

Tags:    

Similar News