ராமநாதபுரம் நீதிமன்றத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆஜர் !
பணம் மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளியான பவர் ஸ்டார் சீனிவாசன் நீதிமன்றத்தில் தானாக முன்வந்து சரண் அடைந்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-11 11:57 GMT
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்
நீதிமன்றம்
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன்
ராமநாதபுரம் தேவிபட்டினம் முனியசாமி என்பவரிடம் அவரின் தொழிலை மேம்படுத்த ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ஆவண செலவாக ரூ.14 லட்சம் வாங்கினார். கடன் வாங்கி தராமல் தான் வாங்கிய பணத்திற்காக போலி செக் கொடுத்து ஏமாற்றினார். செக் மோசடி வழக்கில் ராமநாதபுரம் ஜேஎம்.1 கோர்ட்டில் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கபட்டது. இதற்காக நீதிபதி நிலவேஸ்வரன் முன்னிலையில் இன்று சரணடைந்தார்.