சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவிலில் கூலி உயர்வு வழங்கக்கோரி விசைத்தறி தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 5,000-க்கு மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் 15 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள், விசைத்தறி தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு கேட்டு 11 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் எந்தவித உடன்பாடும் ஏற்படவில்லை. மேலும் விசைத்தறி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், சாலை மறியல், காத்திருப்பு போராட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்த பலனும் இல்லை.
இந்நிலையில் திருவேங்கடம் சாலையில் உள்ள பாடாப்பிள்ளையார் கோவில் முன்பு விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்க மாநில தலைவர் மகாலெட்சுமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது தென்காசி மாவட்ட தலைவர் மாரியப்பன், மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட பொருளாளர் மாணிக்கம் விசைத்தறி மாவட்ட செயலாளர் ரத்தினவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் அசோக்ராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.ஆர்ப்பாட்டத்தின் பெண்கள் உள்ளிட்ட ஏராளமான வர்கள் கலந்து கொண்டனர். 11 நாள் வேலை நிறுத்த போராட்டத்தால் 7 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது. முடிவில் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.