வெள்ளகோவில் சிவன் கோவில்களில் பிரதோஷ பூஜை

வெள்ளகோவில் சுற்றியுள்ள சிவன் கோவில்களில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷ சிறப்பு பூஜை மிக விமர்சையாக நடைபெறும். அதேபோல் நேற்றும் வெள்ளகோவில் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் பிரதோஷ பூஜை ஆனது சிறப்பாக நடைபெற்றது.

Update: 2024-03-23 07:05 GMT

பிரதோஷ வழிபாடு 

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் தெய்வநாயகி உடனமர் சோளீஸ்வரர் சாமி கோவில், வள்ளியரச்சல் சிவன் கோவில், மாந்தபுரம் மாந்தீஸ்வரர் கோவில், மயிலரங்கம் தையல்நாயகி உடனமர் வைத்தியநாதன் கோவில், கண்ணபுரம் வித்தகச் செல்வி சமேத விக்ரம சோளீஸ்வரர் கோவில், லக்னநாயக்கன்பட்டி அழகேஸ்வரர் கோவில், உத்தமபாளையம் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் ஆகிய கோவில்களில் பிரதோஷத்தை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கோவிலில் சிவபெருமானுக்கும், நந்திக்கும் சிறப்பு அலங்காரம், தேன், பஞ்சாமிர்தம், கனி, விபூபதி, மஞ்சள், சந்தனம், மலர், பன்னீர் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை அந்தந்த கோவில் பிரதோஷ வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News