சேலம் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
சேலம் உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-20 11:08 GMT
சிறப்பு அலங்காரத்தில் சுவாமி
சேலம் அருகே உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. முன்னதாக பெரியநாயகி சமேத கரபுரநாதர் சாமிக்கு நெய். பால். தேன். இளநீர். சந்தனம். உள்ளிட்ட வாசனை திரவிய பொருட்களால் அபிஷேக ஆராதனை நடந்தது.
கரபுரநாதர் சாமி பெரியநாயகியுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்து காட்சி தந்தார். இந்த பிரதோஷ வழிபாட்டில் உத்தமசோழபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்களை சேர்ந்த பக்தர்கள் வந்திருந்து கரபுரநாதர் சுவாமி வழிபட்டனர்.