உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு
உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் சிறப்பு அலங்காரத்தில் கரபுரநாதர் அருள் பாலித்தார்.;
Update: 2024-02-08 01:30 GMT
உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் நடந்த பிரதோஷ வழிபாட்டில் சிறப்பு அலங்காரத்தில் கரபுரநாதர் அருள் பாலித்தார்.
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. முன்னதாக பெரியநாயகி சமேத கரபுரநாதர் சுவாமிக்கு தேன், பால், இளநீர், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம், ஆராதனை நடந்தது. கரபுரநாதர் சர்வ அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் உத்தமசோழபுரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்த சுவாமியை வழிபட்டனர். கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.