தொண்டரீஸ்வரர் கோயிலில் பிரதோஷ வழிபாடு!
தொண்டரீஸ்வரர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
Update: 2024-05-20 15:20 GMT
திருவண்ணாமலை கொசமடத் தெருவில் தொண்டரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இன்று சோமவார பிரதோஷத்தை முன்னிட்டு சாமிக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொண்டரீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.