வேலூர் ஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம்
வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு சிறப்பு அபிஷேகங்களை செய்து மகாதீபாராதனைகள் காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
Update: 2023-12-25 04:38 GMT
அபிஷேகம்
வேலூர்மாவட்டம்,வேலூர் கோட்டையிலுள்ள ஸ்ரீஜலகண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு பால்,தயிர் ,சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகங்களை செய்து மலர் மாலைகள் அருகம்புல் வில்வ இலைகளை கொண்டு சிறப்பு அலங்காரங்களை செய்து மகாதீபாராதனைகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அரோகரா முழக்கங்களை எழுப்பி சாமிதரிசனம் செய்தனர்.