பிரசன்ன சின்ன மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா

மயிலாடுதுறை காவிரிக்கரையில் பிரசன்ன சின்னமாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2024-05-24 01:12 GMT

மயிலாடுதுறை காவிரிக்கரையில் பிரசன்ன சின்னமாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


மயிலாடுதுறை காவிரிக்கரை திம்மநாயக்கன் படித்துறையில் பழைமைவாய்ந்த பிரசன்ன சின்ன மாரியம்மன் கோயிலில் அமைந்துள்ளது. இக்கோயிலின் 65-ஆம் ஆண்டு உற்சவம் பூச்சொரிதல் மற்றும் காப்பு கட்டுதலுடன் மே 13-ஆம் தேதி தொடங்கியது. 11-ஆம் நாள் விழாவான தீமிதித் திருவிழாவையொட்டி, காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள் காவிரிக்கரையில் இருந்து, வேப்பிலை ஏந்தியும், உடலில் அலகு குத்தியும் வீதியுலாவாக கோயிலை அடைந்தனர். அங்கு கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை பூர்த்தி செய்தனர். தொடர்ந்து, இரவு அம்பாள் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.
Tags:    

Similar News