விஜயகாந்த் உடல்நலம் பெற தேமுதிக சார்பில் பிரார்த்தனை

Update: 2023-12-07 06:29 GMT

தேமுதிகவினர் வழிபாடு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கபட்டு சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அரியலூர் ஒன்றிய தேமுதிக சார்பில் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பெற வேண்டும் என கடுகூர் கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் ஆலயத்தில்  சிறப்பு பிராத்தனை நடத்தபட்டது. மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து சுவாமிக்கு மகா தீபாரதணை காண்பிக்கபட்டது. இதில் மாவட்ட பொருளாளர் சக்திவேல், கடுகூர் ஊராட்சி செயலாளர் பஞ்சநாதன், பொதுக்குழு உறுப்பினர் இளங்கோவன், வடக்கு ஒன்றிய பொருளாளர் ராஜீவ்காந்தி மற்றும் ஐயப்பன், முருகானந்தம், செல்வராசு, முருகையன், மணிகண்டன், சுரேஷ், பூவரசன் உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News