மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான முதல்நிலை சோதனை
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரகளுக்கான முதல்நிலை சோதனை நடைப்பெற்றது.
Update: 2024-04-07 12:45 GMT
இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2024 தொடர்பாக, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரக் கிடங்கில், கூடுதலாக வரபெற்ற மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான முதல்நிலை சோதனை (First level Checking) நிகழ்வு நடைபெறும் பணிகளை, திருச்சி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் திரு.தினேஷ் குமார் பார்வையிட்டார்.
உடன் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி-வைகை-குண்டாறு) ஆர்.ரம்யாதேவி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) எஸ்.வெங்கடாசலம், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அ.ஷோபா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.