அரியலூரில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்
அரியலூரில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-03 14:31 GMT
அரியலூரில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தபட்டு இருந்தது. இதனையொட்டி அரியலூர் மாவட்டம் செந்துறை நெடுஞ்சாலைதுறை அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தேவையான மணல்மூட்டைகள்,
கருவி, தளவாடங்கள், ஜேசிபி இயந்திரங்கள், மரம் அறுக்கும் இயந்திரம் உள்ளிட்டவைகள் இருப்பு வைக்கபட்டுள்ளது. மேலும் திறன்மிகு சாலை பணியாளர்களும் எந்நேரமும் தயார் நிலையில் இருப்பதாக செந்துறை நெடுஞ்சாலைதுறை அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.