புதிய வாகனங்கள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கல்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 114 புதிய வாகனங்கள் வழங்குவதன் முதற்கட்டமாக 77 புதிய வாகனங்களை (Bolero BS-VI ரகம்) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.6.2024) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், வருவாய்த் துறையில் பணிபுரியும் துணை ஆட்சியர் / வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரின் பயன்பாட்டிற்காக 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 114 புதிய வாகனங்கள் வழங்குவதன் முதற்கட்டமாக 77 புதிய வாகனங்களை (Bolero BS-VI ரகம்) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் எஸ்.கே. பிரபாகர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளர் வே.ராஜாராமன், கூடுதல் ஆணையர் (வருவாய் நிருவாகம்) முனைவர் நடராஜன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.