உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகத் தலைவர் தேக்கமலை கரூரில் பேட்டி

உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகத்தின் நிறுவன தலைவர் தேக்கமலை கரூரில் பேட்டி அளித்தார்.;

Update: 2024-05-18 03:36 GMT

உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகத்தின் நிறுவன தலைவர் தேக்கமலை கரூரில் பேட்டி அளித்தார்.


எங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்களை ஏமாற்ற நினைத்தால், அவர்களை தமிழகம் முழுவதும் அம்பலப்படுத்துவோம். உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகத்தின் நிறுவன தலைவர் தேக்கமலை கரூரில் பேட்டி. கரூர் மாவட்டம், மருதம்பட்டி காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர் உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகம் கட்சியின் மாவட்ட செயலாளர்.இவர் காலி மனையில் வீடு கட்டி விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார். கரூரை அடுத்த ராயனூர், தீரன் நகர் சந்திரசேகரன் என்பவர், தனக்கு சொந்தமான காலி மனையில் வீடு கட்டி, விற்ற பிறகு, காலி மனைக்கு உண்டான பணத்தை கொடுத்தால் போதும் என்று கூறியதால், வெங்கடேஷ் அவரது காலி மனையை ரூ 15 லட்சத்துக்கு பேசி, ரூபாய் 6 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து,ஒப்பந்தம் செய்து,அந்த இடத்தில் ரூபாய் 32 லட்சம் செலவு செய்து வீடு கட்டி உள்ளார். பணிகள் முடிவுரும் நேரத்தில், சந்திரசேகர் வீடும், மனையும் தனக்கு தான் சொந்தம் எனக்கூறி வெங்கடேசை ஏமாற்றும் நோக்கில் செயல்பட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட வெங்கடேஷ், இன்று உழைக்கும் மக்கள் விடுதலைக் கழகத்தின் நிறுவன தலைவர் தேக்க மலையுடன் சென்று, தன்னை ஏமாற்றிய சந்திரசேகர் மீது உரிய நடவடிக்கை எடுத்து தனது பணத்தை மீட்டு தர வலியுறுத்தி எஸ் பி அலுவலகத்தில் புகார் அளித்தார்.

Advertisement

இது தொடர்பாக உழைக்கும் மக்கள் விடுதலைக் கழக நிறுவன தலைவர் தேக்கமலை செய்தியாளர்களிடம் தெரிவிக்கும்போது, எங்கள் அமைப்பைச் சேர்ந்தவரை ஏமாற்றும் நோக்கோடு செயல்பட்டவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். காவல்துறையினரும் ஒப்பந்தம் செய்தபடி 15 லட்சத்தில் ஆறு லட்சம் போக மீதியைப் பெற்றுக் கொண்டு பிரச்சனையை தீர்த்துக் கொள்ள வேண்டுமென ஆலோசனை கூறியுள்ளனர். எங்கள் அமைப்பினர் தமிழக முழுவதும் கல் உடைப்பது, கட்டுமான பணியில் ஈடுபடுவது, கிணறு வெட்டுவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் எங்கள் அமைப்பு அதற்காக போராடும். இங்கு நடைபெற்ற விஷயத்தில் ஏமாற்ற நினைக்கும் சந்திரசேகர் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம். புகாரை விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறோம். அவ்வாறு செய்யவில்லை என்றால் தமிழக முழுவதும் சந்திரசேகர் ஏமாற்றியதை அம்பலப்படுத்துவோம் என்றார்.

Tags:    

Similar News