மரவள்ளி கிழங்கு விலை சரிவு

பரமத்திவேலூரில் மரவள்ளி கிழங்கின் விலை சரிந்ததால் வியாபாரிகள் கவலையடைந்தனர்.

Update: 2024-06-07 14:35 GMT

பரமத்திவேலூரில் மரவள்ளி கிழங்கின் விலை சரிந்ததால் வியாபாரிகள் கவலையடைந்தனர். 

பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்   மரவள்ளி கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விளையும்   மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர்.  கிழங்கு  ஆலைகளில் மரவள்ளி   கிழங்கில்  இருந்து ஜவ்வரிசி மற்றும்   கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது.

மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள்  மரவள்ளி கிழங்கில்  உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளி  கிழங்கு டன் ஒன்று ரூ.11 ஆயிரத்திற்கு விற்பனையானது. தற்பொழுது  மரவள்ளி கிழங்கில் மாவுச்சத்து குறைந்துள்ளதாலும் 18 முதல் 20 புள்ளிகள் இருப்பதாலும் டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வரை  குறைந்து டன் ஒன்று ரூ.7 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது. அதே போல் சிப்ஸ் தயாரிக்கும் மரவள்ளி  கிழங்கு டன் ஒன்று கடந்த வாரம் டன் ஒன்று ரூ.11 ஆயிரத்திற்கு விற்பனையானது.  தற்போது டன் ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் வரை உயர்வடைந்து டன் ஒன்று  ரூ.14ஆயிரத்திற்கு  விற்பனையாவதாக   வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News