விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டமே பாஜகவின் சாதனை -ப.சிதம்பரம்!

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டமே பாஜகவின் சாதனை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசினார்.

Update: 2024-04-12 14:27 GMT

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டமே பாஜகவின் சாதனை என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசினார். 

விலைவாசி உயர்வும், வேலையில்லா திண்டாட்டம் மட்டுமே பத்தாண்டு கால பாஜக அரசின் சாதனைகள் என்றார் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம். சிவகங்கை மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பொன்னமராவதியில் பேருந்து நிலையம் எதிரே காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து வாக்குகள் சேகரித்து அவர் மேலும் பேசியதாவது:

திமுக அரசு மூன்றாண்டுகளில் முத்தான, முத்திரை பதிக்கும் பல திட்டங்களை தந்துள்ளது. பத்தாண்டு கால ஆட்சியில் பாஜக நாட்டுக்கு என்ன செய்தது. சமையல் எரிவாயு முதல் அனைத்துப் பொருள்களின் விலையும் உயர்ந்துள்ளது. பாஜக அரசு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. மொத்தத்தில் விலைவாசி உயர்வும்,வேலைவாய்ப்பின்மையையு ம் மட்டுமே பாஜக அரசு விட்டுச் சென்றுள்ளது. நாட்டின் பொருளாதாரம் நிலைத்து உயரவும், மக்கள் நலன் காக்கவும் இந்தியா கூட்டணி வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்றார். தொடர்ந்து, மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி வாக்குகள் சேகரித்து பேசினார்.

முன்னாள் எம்எல்ஏ ராம. சுப்புராம், வட்டார காங்கிரஸ் தலைவர் வி. கிரிதரன், உட்பட பலர்  பங்கேற்றனர்.

Tags:    

Similar News