கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக காய்கறிகள் விலை உயர்வு!!

கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.

Update: 2024-07-13 06:13 GMT

Koyambedu Market

கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வரத்து குறைவு காரணமாக, கடந்த 2 மாதங்களாக காய்கறிகள் விலை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 600 வாகனங்களில் இருந்து 7,000 டன்னுக்கும் குறைவாக காய்கறிகள் வந்தன. இதன் காரணமாக காய்கறிகளின் விலை நேற்றும் உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோபெரிய வெங்காயம் ரூ.40, சின்ன வெங்காயம் மற்றும் பீட்ரூட் ரூ.90, கேரட் மற்றும் பீன்ஸ் ரூ.80, காராமணி ரூ.60, சேனைக்கிழங்கு ரூ.70, முருங்கைக்காய் ரூ.110, காலிபிளவர், பீரக்கங்காய் ஆகியவை ரூ.50, பச்சை மிளகாய் ரூ.45, பட்டாணி ரூ.200, இஞ்சி ரூ.150, பூண்டு ரூ.350, அவரைக்காய் ரூ.75, எலுமிச்சை ரூ.120, வண்ண குடைமிளகாய் ரூ.160, தக்காளி, சவ்சவ், முள்ளங்கி, வெண்டை, கத்தரி, நூக்கல் ஆகியவை ரூ.50, கோவக்காய், கொத்தவரை, புடலை ஆகியவை ரூ.30 என விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும் காய்கறி கடைகள் அமைத்துள்ள சில்லரை வியாபாரிகள் நேற்று அத்தியாவசிய காய்கறிகளான தக்காளி, வெங்காயம் மற்றும் ஒருசில காய்கறிகளை மட்டும் குறைவாக வாங்கிச் சென்றனர். இதனால் கோயம்பேட்டில் காய்கறி விற்பனை மந்தமாக காணப்பட்டது.

Tags:    

Similar News