கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்.

பெரம்பலூர், வேப்பூர், ஆலத்தூர் மற்றும் வேப்பந்தட்டை வட்டார கல்வி அலுவலகங்கள் முன்பு 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2024-01-12 04:52 GMT

ஆர்ப்பாட்டம் 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர், வேப்பூர், ஆலத்தூர் மற்றும் வேப்பந்தட்டை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் வட்டார கல்வி அலுவலகங்கள் முன்பு 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜாக் சார்பில் ஜனவரி 11 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் பெரம்பலூர் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அதன் பொறுப்பாளர்கள் அமல்ராஜ், மரியபாப்பு, செல்வம் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு பெருத்த பாதிப்பினை ஏற்படுத்தும் அரசாணை எண் 243 ரத்து செய்ய வேண்டும், 60 ஆண்டுகால ஒன்றிய அபகு முன்னுரிமையினை மாநில முன்னுரிமையாக மாற்றியதை வாபஸ் பெற வேண்டும், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

. இதே போல மாவட்டத்தில் உள்ள மற்ற வட்டார கல்வி அலுவலகங்கள் முன்பு அதன் பொறுப்பாளர்கள் முன்னிலையில் நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜாக் நிர்வாகிகள் ரமேஷ், அங்கமுத்து, மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, பெரம்பலூர் மாவட்ட தலைவர் சந்திரசேகர், தனியார் கிளை செல்வம் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News