நாட்றம்பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

நாட்றம்பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மாவட்ட கண்கானிப்பாளர் நந்தகுமார் பங்கேற்றார்.

Update: 2023-12-29 15:08 GMT

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் 

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி பேரூராட்சிக்குட்பட்ட வார்டு பொதுமக்களுக்கான மக்கள் குறை தீர்வுக்கான கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கண்காணிப்பாளர் நந்தகோபால், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சூரியகுமார், மாவட்ட திட்ட இயக்குனர் செல்வராசு, கோட்டாட்சியர் பானு, வட்டாட்சியர் குமார், ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் நாட்றம்பள்ளி பேரூராட்சி 1 முதல் 7 வார்டில் உள்ள பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்துஇந்த முகாமில் மனுகொடுத்தனர் இந்த முகாமில் அனைத்து விதமான சான்றிதழ், அனைத்து துறை சார்ந்த குறைகளையும் இந்த முகாமில் தீர்த்துக் கொள்ளலாம்.

இந்த முகாமில் பேசிய ஆட்சியர் மக்களுடன் முதல்வர் திட்டம் மக்களின் குறையை போக்கவே துவங்கப்பட்டது. அனைத்து திட்டத்திற்கும் திருப்பத்தூர் மாவட்டம் முன்னோடியாக திகழ்கிறது முகாம்களில் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துக்கொண்டுள்ளனர். அதேபோல் மின்சார துறைகளில் உள்ள குறைகளை போக்க அதாவது பெயர் மாற்றம் செய்வது மிக கடினம் அதனால் தான் இந்தப் முகாமை பயன்படுத்தி பெயர் மாற்றம் செய்துக் கொள்ளலாம் என்றார். மகளிர் உரிமை தொகை பெற விண்ணபிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றார்.

தகுதி வாய்ந்தவர்களுக்கு உரிமை தொகை வழங்கப்படும் என்றார். இன்று இந்த முகாமில் சுமார் 80 மனுக்கள் பெறப்பட்டு 60 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் ஒரு மாதத்தில தீர்வு காணப்படும்.

Tags:    

Similar News