அரசு நிலம் ஆக்கிரமித்து தனியார் கட்டிடம் - அகற்றப்படுமா?

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்படும் தனியார் கட்டிடம் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்ப

Update: 2023-12-25 16:38 GMT

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்படும் தனியார் கட்டிடம் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்ப

நாகை மாவட்டம் திட்டச்சேரியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்படும் தனியார் கட்டிடம் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். *தனியார் கட்டிடம் * திட்டச்சேரி பேரூராட்சிக்கு சொந்தமான பிடாரிகுளம் உள்ளது. இந்த குளத்துக்கு அருகில் சில வீடுகள் உள்ளது. அந்த வீட்டின் தனி நபர் ஒருவர் குளத்தின் கரையில் ஆக்கிரமித்து கட்டிடம் ஒன்றை கட்டி வருகிறார். இந்த கட்டிடத்தை பேரூராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து கட்டுமான பணியை கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி தடுத்து நிறுத்திய பேரூராட்சி நிர்வாகம் திட்டச்சேரி கிராம நிர்வாக அலுவலரிடம் கூறி இடத்தை உரிய அளவீடு செய்து ஆக்கிரமிப்பை இடிப்பதாக கூறியது.இந்த நிலையில் பேரூராட்சி நிர்வாகம் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏற்கனவே இரண்டு குளங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள நிலையில் பேரூராட்சிக்கு சொந்தமான மூன்றாவது குளத்திலும் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை தடுத்து நிறுத்த பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால் பேரூராட்சி நிர்வாகமோ பேரூராட்சி தலைவரின் சொந்த 2-வது வார்டில் இந்தப் பணி தற்பொழுது நடைபெறுகிறது. இதனை தடுத்து நிறுத்தாமலும் ஒன்பது மாத காலமாக எந்தவித அளவீடு பணிகளையும் செய்யாமல் இருப்பதை அறிந்து கொண்ட தனிநபர் பண்டிகை விடுமுறை காலங்களை கருத்தில் கொண்டு தற்போது கட்டுமான பணிகளில் தீவிரம் காட்டி பணிகள் வெகு விரைவாக நடைபெற்று வருகிறது.பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்பில் உள்ள கட்டிடத்தை அகற்ற உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News