டூவீலரில் சென்றவர் மீது தனியார் பேருந்து மோதி விபத்து

முருகன் நகர் அருகே, டூவீலரில் சென்றவர் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்;

Update: 2023-12-28 15:55 GMT

விபத்து

கரூர் மாவட்டம், உப்பிடமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் வயது 40. இவர் இவருக்கு சொந்தமான டூவீலரில் பழனியில் இருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலையில் டிசம்பர் 25ஆம் தேதி மதியம் 3:30-மணி அளவில் சென்று கொண்டிருந்தார். இவரது டூவீலர் முருகன் நகர் பஸ் ஸ்டாப் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிர் திசையில் வேகமாக வந்த VKA தனியார் பேருந்து, செல்வராஜ் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

Advertisement

இந்த விபத்தில் செல்வராஜுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக செல்வராஜ் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், பேருந்தை அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய கரூர் மாவட்டம்,  சின்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த லோகநாதன் வயது 52 என்பவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.

Tags:    

Similar News