தனியார் பேருந்துகள் மோதல் - வாக்குவாதம், போக்குவரத்து பாதிப்பு.
Update: 2023-12-08 03:30 GMT
போக்குவரத்து பாதிப்பு
மாவட்டம் தாந்தோணி மலை மில்கேட் அருகே திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி மகாராணி என்னும் தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது. அதே வேளையில் தாந்தோணி மலைப் பகுதியிலிருந்து கரூர் நோக்கி விநாயகா மினி பேருந்து சென்றது. அப்போது மினி பேருந்து தாந்தோணி மில்கேட் அருகே பயணிகளை ஏற்றுவதற்காக திடீரென சாலையில் நிறுத்தியதால், பின்னால் வந்த மகாராணி பேருந்து மினி பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. இரு பேருந்துகளும் சேதம் ஏற்பட்டதால், இரு பேருந்துகளின் டிரைவர்களும் கீழே இறங்கி ஒருவருக்கொருவர் வாக்குவாதம் செய்தனர். அப்போது, பயணிகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வாக்குவாதம் செய்தனர். சம்பவம் அறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்துக்கு இடையூறாக நின்ற இரண்டு பேருந்துகளையும் அப்புறப்படுத்தினர். இதனால், அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பும், பரபரப்பு ஏற்பட்டது.