தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை
நாமக்கல் மாவட்டம்,குமாரபாளையத்தில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-03-25 02:28 GMT
தற்கொலை
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே நாராயண நகர் பகுதியில் வசித்து வந்தவர் குமார், (45). இவரது மனைவி பிரேமா, மற்றும் மகன் கோபிநாத் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள். குடிப்பழக்கம் இருந்ததால், குடித்துவிட்டு அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்றுமுன்தினம் இரவு 07:00 மணியளவில் இவரது வீட்டில், தூக்கு மாட்டி இறந்தார் என்ற தகவல், பாறையூர் பகுதியில் வசிக்கும் இவரது தாயார் தனம், (70), என்பவருக்கு தகவல் கிடைத்தது.
குமாரபாளையம் அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைத்த பிரேதம் கண்டு குடும்பத்தினர் கலங்கினர். இது குறித்து குமாரபாளையம் போலீசில் தாயார் தனம் புகார் கொடுத்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.