சாலையில் பொதுமக்களை கடித்த வெறி நாய்களை தனியார் அமைப்பினர் பிடிப்பு !
திருப்பூர் குமரன் சாலையில் பொதுமக்களை கடித்த ஆறு வெறிநாய்களை தனியார் அமைப்பினர் பிடித்துச் சென்றனர்.
திருப்பூர் குமரன் சாலையில் பொதுமக்களை கடித்த 6 வெறி நாய்களை தனியார் அமைப்பினர் பிடித்து சென்றனர். திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வெறி நாய்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. மாநகர பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெறிநாய்கள் கடிதத்தில் முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டு., குமரன் சாலையை சோந்த பேபி என்ற பெண்மணியை வெறி நாய்கள் கடித்ததில் , படுகாயமடைந்தவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அப்பகுதிகயை சேர்ந்த பொது மக்கள் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் தனியார் அமைப்பினரிடம் கொடுத்த புகாரின் பேரில் இன்று காலை குமரன் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில்பொதுமக்களை கடித்த மற்றும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிந்த 6 வெறி நாய்களை தனியார் அமைப்பினர் லாபகமாக பிடித்துச் சென்றனர். இதனையடுத்து அப்குதியை சேர்ந்த பொது மக்கள் தனியார் அமைப்பினருக்கு நன்றி தெரிவித்தனர்.