தனியார் வேலை வாய்ப்பு முகாம்
புதுக்கோட்டையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
புதுகை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் புதுக்கோட்டையில் லேணவிளக்கு செந்தூரன் பொறியியல் கல்லூரியில் வரும் 23ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடக்கிறது. முகாமில் தொழில் துறை, சேவை துறை, விற்பனை துறை, போன்ற பல்வேறு துறைகளை சார்ந்த 150 க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற தகுதி உள்ள நபர்களை
பணிக்கு தேர்ந்தெடுக்க உள்ளன. மேலும் இதில் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்கள் தங்களது சுய விவர குறிப்பு ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்.