தர்மபுரியில் நாளை தனியார் வேலை வாய்ப்பு முகாம்

தர்மபுரி கடகத்தூர் அரசு ஐடிஐயில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-15 02:38 GMT

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், தர்மபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு - தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நாளை 16ம் தேதி வெள்ளிக்கிழமை தர்மபுரி கடகத்தூர் அரசினர் ஐடிஐயில் நடக்கிறது.

இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 75க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு, 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய வுள்ளனர்,காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறவிருக்கும் இம்முகாமில், 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதி உள்ளவர்களும் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி இலவசம். இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் இணையதளத்தில் பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.எனவே, காலிப்பணியிடங்களுக்கு வேலைநாடுநர்களை தேர்வு செய்யவுள்ள தொழில் நிறுவ னங்களும், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Tags:    

Similar News