திருக்கோவிலூரில் மின்வாரிய ஓய்வூதியர்கள் ஊர்வலம்
Update: 2023-11-22 05:34 GMT
ஊர்வலம்
திருக்கோவிலுாரில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வூதியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் ஊர்வலம் நடந்தது. வட்ட கிளை சார்பில், நடந்த ஊர்வலத்திற்கு, வட்டத் தலைவர் செல்வமணி தலைமை தாங்கினார். செயலாளர் தங்கராஜ், பொருளாளர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். ஊர்வலத்தில், ஓய்வூதியத்தை தமிழ்நாடு மின்வாரிய நிதியிலிருந்து தொடர்ந்து வழங்க வேண்டும். பணமில்லா மருத்துவ வசதிக்காக பிடிக்கும் தொகையை கைவிட வேண்டும். தமிழ்நாடு மின் கழக ஆணை எண் 2ஐ உடனே ரத்து செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.