நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி - அமைச்சர் பங்கேற்பு!
ஜோலார்பேட்டை பகுதியில் நடைபெற்ற கலைஞ்சார் நூற்றாண்டு விழாவில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் ஏவ வேலு வழங்கினார்.
By : King 24x7 Angel
Update: 2024-02-17 11:18 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பாந்தாரப்பள்ளி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கலைஞ்சரின் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி13 துறைகளில் 1881 பயனாளிகளுக்கு 7,51,08,491, கோடி ரூபாய் மதிப்பீட்டில் உழவர் பாதுகாப்பு திட்டம் இயற்க்கை மரண நிவாரண தொகை, மகளிர் சுயஉதவி குழு கடன் மற்றும், திருமண உதவி தொகை,இயற்க்கை மரணம் மற்றும் வேளாண்துறை சார்பில் மின்மோட்டார்.டியாக்ட்டர்,தையல் மிஷின்,மாற்று திறனாளிகளுக்கு,மூன்று சக்கர வாகனம், வீட்டுமனை பட்டா உள்ளிட்டவைகளை வழங்கினார். பொதுப்பணித்துறை அமைச்சர் பேசுகையில் தமிழக முதலமைச்சர் பெண்களுக்காக முன்னுரிமை வழங்குதல் திருப்பத்தூர் மாவட்டம் பிரிப்பதற்கு முன்பு சந்தனமா நகரம் வருவாய் ஈட்டக் கூடிய நிலையில் இருந்தது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை குறித்து பேசினார். இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என். அண்ணாதுரை, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜி, ஜோலார்பேட்டை ஒன்றிகுழு தலைவர் சத்தியா சதீஷ் கவிதா தண்டபாணி மற்றும் துறையை சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.