திருவாரூர் மாவட்டத்தில் அதிரடி மதுவிலக்கு வேட்டை
திருவாரூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட அதிரடி மதுவிலக்கு வேட்டையில் 117 பேர் கைது செய்யப்பட்டனர்.;
Update: 2024-03-15 06:34 GMT
எஸ்பி ஜெயக்குமார்
கடந்த மூன்று நாட்களில் கள்ளத்தனமாக மது விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதாக 116 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 117 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து சுமார் 300 லிட்டர் பாண்டிச்சேரி சாராயம் மற்றும் ஆயிரத்து 645 மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மூன்று இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது