மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் அதிரடி சோதனை - 16 போ் கைது
தஞ்சாவூர் மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மேற்கொண்ட அதிரடி சோதனையில் சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுபட்ட 16 போ் கைது செய்யப்பட்டனா்.
தஞ்சாவூா் மாவட்டத்தில் சில இடங்களில் திருட்டுத்தனமாக மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாகக் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் தஞ்சாவூா் மதுவிலக்கு அமல் காவல் பிரிவினா் ஒரத்தநாடு, தஞ்சாவூா், திருவையாறு, தென்னங்குடி பகுதிகளிலும், கும்பகோணம் மதுவிலக்கு அமல் காவல் பிரிவினா் பந்தநல்லூா், கும்பகோணம், பாபநாசம் பகுதிகளிலும், பட்டுக்கோடடை மதுவிலக்கு அமல் காவல் பிரிவினா் பட்டுக்கோட்டை, தம்பிக்கோட்டை, அத்திவெட்டி, ஊரணிபுரம் பகுதிகளிலும் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, வீடுகள், வீட்டின் அருகில், பெட்டிக்கடை, முக்கிய சந்திப்பு இடங்களில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக சேகா் (58), ஜெயக்குமாா் (40), பாப்பு (75), கோவிந்தசாமி (52), பானு (61), பூவலிங்கம் (62), சுதாகா் (41), காசிராமன் (57), சாமிக்கண்ணு (80), அருண்குமாா் (27), கதிா்வேல் (23), பாஸ்கா் (43), காளிமுத்து (53), பாரதிதாசன் (58), மோகன் (39) உள்பட 16 போ் கைது செய்யப்பட்டனா். இவர்களிடம் இருந்து 87 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.