32 ஏட்டுகளுக்கு பதவி உயர்வு
காவல்துறையில் 25 வருடம் சிறப்பாக பணியாற்றிய 32 ஏட்டுகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.;
Update: 2024-06-13 17:57 GMT
பதவி உயர்வு
திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையில் பல்வேறு காவல் நிலையங்களில் பணியாற்றிய ஏட்டுகளுக்கு சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி காவல்துறையில் 25 வருடம் சிறப்பாக பணியாற்றிய ஏட்டுகள் 32 பேருக்கு சிறப்பு உதவி காவல் ஆய்வாளராக பதவி உயர்வு வழங்கி எஸ்பி கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து பதவி உயர்வு பெற்ற போலீசார் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.