மாரங்கியூரில் கரும்பு நடவு செய்ய ஊக்குவிப்பு கூட்டம்

மாரங்கியூரில் கரும்பு நடவு செய்ய ஊக்குவிப்பு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-05-23 11:42 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் செயலாட்சியர் முத்துமீனாட்சி அறிவுரையின்படி ஏனாதிமங்கலம் கோட்டம் மாரங்கியூர் கிராமத்தில் கரும்பு நடவு செய்ய ஊக்குவிப்பு கூட்டம் நடைபெற்றது.

இதற்கு கோட்ட அலுவலர் கோபிசிகாமணி தலைமை தாங்கினார். அப்போது அவர், அனைத்து விவசாயிகளையும் கரும்பு நடவு செய்யுமாறும், பதிவில்லா கரும்பு வைத்திருக்கும் விவசாயிகளை பதிவு செய்யுமாறும் ஆதார் மற்றும் ரேஷன் கார்டு நகல் வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். மேலும் கரும்பின் ரகங்கள் குறித்தும், பூச்சிநோய் மேலாண்மை குறித்தும், இயந்திர சாகுபடியின் அவசியம்பற்றியும் விளக்கி பேசினார்.

இக்கூட்டத்தில் சுந்தரவதனம், சவுந்தர், சக்திவேல், பிச்சைக் காரன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை கோபாலகிருஷ்ணன் செய்திருந்தார். முடிவில் தங்கவேல் நன்றிகூறினார்

Tags:    

Similar News