சொத்து தகராறில் அண்ணன் கடையை உடைத்து கொள்ளை - தம்பிக்கு போலீஸ் வலை

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் சொத்து தகராறு காரணமாக அண்ணனின் கடையை உடைத்து தம்பி கொள்ளையடித்தது குறித்து சிசிடிவி ஆதாரங்களுடன் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-10-27 00:48 GMT

திருட்டுப்போன கடை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் பகுதியை சேர்ந்த ராஜசேகரன். கடைவீதியில் எலக்ட்ரிகல்ஸ் மற்றும் செல்போன் விற்பனையகம் நடத்தி வருகிறார். இவரது தம்பி ஜான்சன் அதே பகுதியில் ஸ்டேஷனரி பொருட்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். இருவருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இன்று காலை கடையை வழக்கம்போல் திறக்க வந்தபோது அவரது கடையின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து அங்குள்ள சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது சொந்த தம்பியான ஜான்சன் கொள்ளை கும்பல் ஒன்றின் உதவியோடு கடையை உடைத்து உள்ளே நுழைந்ததுடன் கடையில் இருந்த 2.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலையுயர்ந்த செல்போன்கள் மற்றும் ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது.இதுகுறித்து வைத்தீஸ்வரன் கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News