சொத்து பிரச்சனை- பெண்ணை தாக்கிய 4பேர் மீது வழக்கு பதிவு
சொத்து பிரச்சனை தொடர்பாக பெண்ணை தாக்கிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சொத்து பிரச்சனை தொடர்பாக பெண்ணை தாக்கிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு. சென்னை, சிட்லபாக்கம், தமிழ்நாடு ஹவுஸிங் போர்டு காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் மனைவி அமுதா வயது 52.
இவருக்கு, கரூர், சின்னான்டாங் கோவில், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சுதாகர், கரூர் காந்திபுரம், மின்வாரிய அலுவலகம் பின்புறம் வசித்து வரும் சதீஷ், பாலமணி, திருப்பூரைச் சேர்ந்த பிரபாகரன் மனைவி ரஷ்மி ஆகியோர் உறவினர்கள். இவர்களுக்குள் சொத்து தொடர்பான பிரச்சனை ஏற்கனவே உள்ளது. இ
ந்நிலையில் அமுதாவின் உடன்பிறந்த சகோதரி ஜமுனா ராணி காலமானதால், அவரது இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்க கரூருக்கு வந்தார் அமுதா. டிசம்பர் 17ஆம் தேதி 6- மணி அளவில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ,திண்ணப்பா கார்னர் பகுதியில் உள்ள கருப்பட்டி காபி கடை அருகே வந்து கொண்டிருந்த போது, சுதாகர், சதீஷ், பாலாமணி, ரஷ்மி ஆகிய நான்கு பேரும் சொத்து தொடர்பான பிரச்சனையை அமுதாவிடம் பேசி உள்ளனர்.
அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில், அமுதாவை தகாத வார்த்தை பேசி, கைகளால் தாக்கி, துன்புறுத்தி உள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட அமுதா, கரூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர்,
சொத்து பிரச்சனைக்காக தகாத செயலில் ஈடுபட்ட சுதாகர் ,சதீஷ், பாலாமணி, ரஷ்மி ஆகிய நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.