ஊட்டியில் விபச்சார தொழில்: 2பேர் கைது

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இளம் பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்திய காட்டேஜ் உரிமையாளர் உள்பட 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.;

Update: 2024-04-09 09:55 GMT

விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் ராகுல் பிரசாத் 23, பட்டாசு தொழிற்சாலையில் ஊழியராக உள்ளார். இவர் நேற்று காலை சுற்றுலாவாக ஊட்டிக்கு வந்தார். ஊட்டி பேருந்து நிலையத்தில் இருந்த அவரிடம் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முருகன் 37, என்பவர் அறிமுகமாகி,

தனக்குத் தெரிந்த காட்டேஜில் இளம் பெண் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் உல்லாசம் அனுபவிக்கலாம் என்றும் ஆசை வார்த்தை கூறி அவரை அழைத்து சென்றுள்ளார். இதையடுத்து முருகன் அந்த வாலிபரை காந்தல் பகுதியில் உள்ள ஒரு காட்டேஜுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

Advertisement

அங்கு காட்டேஜ் உரிமையாளர் யாசீர் என்பவர் அறிவுறுத்தலின் பேரில் மேலே இருந்த அறைக்கு பிரசாத் சென்று பார்த்தார். அங்கு 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் இருந்தார். உல்லாசம் அனுபவிக்க ரூ.5 ஆயிரம் தரவேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்றும் ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்து வருவதாக கூறி வெளியே வந்த பிரசாத் இது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். காவல் ஆய்வாளர் மீனாப்பிரியா தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று காட்டேஜில் சோதனை நடத்தி,

இளம் பெண்ணை வைத்து விபசாரம் நடத்திய காட்டேஜ் உரிமையாளர் யாசீர், புரோக்கர் முருகன் உள்பட 2 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களை கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இளம்பெண்ணை மீட்டு காப்பகத்தில் அனுமதித்தனர். 

Tags:    

Similar News