தனியார் மதுபான ஆலை கண்டித்து போராட்டம்!

குன்னத்தூரில் வாகன மோதி தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தது தொடர்பாக தனியார் மதுபான ஆலை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2024-06-29 00:45 GMT

பைல் படம்

விராலிமலை ஒன்றியம் குன்னத்தூரில் தனியார் மதுபான தொழிற்சாலை உள்ளது இங்கு குன்னத்தூர், கலியமங்கலம் ஆவூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் கலியமங்கலத்தை சேர்ந்த மருதையா மகன் பாலகிருஷ்ணன் (27) விஜயகுமார் (29) ஆகிய இருவரும் விராலிமலை அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்துவிட்டு பைக்கில் ஊர் திரும்பினர்.

நாகமங்கலம் கலியமங்கலம் சாலையில் சென்ற போது எதிரே வந்த தனியார் மதுபான தொழிற்சாலைக்கு சொந்தமான வாகனம் எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது இதில் படுகாயம் அடைந்த பாலகிருஷ்ணன், விஜயகுமார் இருவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் வாகன மோதியதில் படுகாயம் அடைந்த இருவருக்கும் மருத்துவ செலவு மற்றும் இழப்பீட்டுத் தொகையை வழங்கக்கோரி கலியமங்கலம் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை தனியார் மதுபான தொழிற்சாலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் மாத்தூரில் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து போராட்டம் நடத்தியவர்கள் மற்றும் மதுபான ஆலை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர் இதில் உடன்பாடு ஏற்பட்டது அடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News