ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகளை தடுத்து போராட்டம்

உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி வரும் நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வர்த்தக, வணிக நிறுவனத்தினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-14 06:16 GMT

புதுக்கோட்டை அடுத்த நமணசமுத்திரத்தை சேர்ந்த தனிநபர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தனது இடத்தை மறைத்து நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து கடைகள் வீடுகள் கட்டி உள்ளதாகவும் அந்த ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலை துறைக்கு உத்திரவிட்டது.

இதைத் தொடர்ந்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்  அப்பகுதியில் இரண்டு பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு 16 கடைகள், ஒரு கோயில் 48 குடியிருப்புகள் ஆகியவற்றை அதிரடியாக அகற்றும் பணியில் ஈடுபட்டு வரக்கூடிய நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த வர்த்தக வணிக நிறுவனங்களைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களது கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் காவல்துறையினரின் பாதுகாப்போடு ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News