ஆக்கிரமிப்பை கண்டித்து மறியல்
தியாகதுருகம் புக்குளம் பஸ் நிறுத்தம் அருகே கோவில் விழாவுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட நபரை கண்டித்து மறியல் போராட்டம் நடந்தது.;
தியாகதுருகம் புக்குளம் பஸ் நிறுத்தம் அருகே கோவில் விழாவுக்கு இடையூறாக ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட நபரை கண்டித்து மறியல் போராட்டம் நடந்தது.
தியாகதுருகம் புக்குளம் பஸ் நிறுத்தம் அருகே அரச மரத்தடியில் சித்தி விநாயகர் மற்றும் ராகு, கேது சுவாமிகளுக்கு கோவில் உள்ளது. இதனை பக்தர்கள் புதுப்பித்து வரும் 19ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்து வந்தனர். கோவில் பொது சுற்றுப்புற பிகாரத்தை சீரமைத்து யாகசாலை அமைக்கும் பணியில் திருப்பணி குழுவினர் ஈடுபட்ட போது அப்பகுதியை ஆக்கிரமித்து வைத்திருந்த தனி நபர் ஒருவர் பணியினை தடுத்தார்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கோவில் மற்றும் பொது இடத்தை ஆக்கிரமித்து கடை அமைத்துள்ள கடைகளை அகற்றக்கோரி 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் நேற்று மதியம் 12:30 மணிக்கு புக்குளம் பஸ்நிறுத்தம் அருகே சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு போட்டியாக இடத்தை ஆக்கிரமித்துள்ளவர்களும் தனது குடும்பத்துடன் மாறியலில் ஈடுபட்டனர்.
இதனால் பரபரப்பு நிலவியது. தகவல் அறிந்து சென்ற போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட வைத்தனர். இதனால் 25 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. இது தொடர்பாக 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். கோவில் கும்பாபிஷேகம் நடைபெற 3 தினங்களே உள்ள நிலையில் இச்சம்பவம் பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.