அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

குளச்சல் அருகே சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு தப்பி ஓடிய ராணுவ வீரரை கைது செய்ய வலியுறுத்தி அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-26 07:51 GMT

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தினர் 

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள திப்பர மலை குதியை சேர்ந்தவர் ஜெபர்சன் (28). இவர் ராணுவத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். அப்போது கடந்த ஐந்தாம் தேதி பக்கத்து ஊரில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று அங்கிருந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமியிடம் வெட்டு கத்தி கேட்டுள்ளார்.  உடனே சிறுமி வெட்டுகத்தி எடுத்து வர வீட்டிற்குள் சென்றார். அப்போது சிறுமியை பின் தொடர்ந்து பாலியல் அத்துமீறல் நடத்தியதாக கூறப்படுகிறது.

பின்னர் மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய தாயிடம் அந்த சிறுமி நடந்ததை கூறி அழுது உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஜெபர்சன் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். ஆனால்  தப்பி வேலைக்கு சென்று விட்டார். தற்போது அவர் காஷ்மீரில் ராணுவ பணியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்  நடத்தி தப்பி ஓடிய வரை கைது செய்ய வலியுறுத்தி அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் குளச்சலில்  நடந்தது. பெண்கள் கழக நிர்வாகி கார்மல் தலைமை வகித்தார். நிர்வாகிகள் சுசீலா, பிரின்சி ஆகியோர் பேசினார். சிந்து, மரிய ,மல்க்ரீட்டா, ஜாஸ்மின், தங்க லட்சுமி உட்பட ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News