ஜல்லிக்கட்டு பயிற்சி மைய அமைப்பினர் போராட்டம்

ஜல்லிக்கட்டு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-12-27 10:27 GMT

 ஜல்லிக்கட்டு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஜல்லிக்கட்டு தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

   பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். தமிழகத்தில் பல்வேறு கிராமங்களில் இதற்காக காளைகள் வளர்க்கப்பட்டு வருவதோடு, மாடுபிடி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியது போல காளை உரிமையாளர்களுக்கு மாதம் 1000ரூபாய் வழங்க வேண்டும், ஜல்லிக்கட்டு போட்டிகளில் சிறுவர்களை களத்திற்குள் அனுமதிக்கக்கூடாது, மேலும் பார்வையாளர்களை பாதுகாப்புடன் அமர வழிவகை செய்ய வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று காளைகளை பிடிக்கும் போது காளை முட்டியும், காயம் அடைந்தும் உயிரிழக்கும் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணநிதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் மற்றும் காளை வளர்ப்போர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்

Tags:    

Similar News