பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம்

ஏகனாபுரம் கிராம மக்கள் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர்.

Update: 2023-12-12 16:14 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை துவக்கி உள்ளது. இந்நிலையில் பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு தேவையான இடங்களை கையகப்படுத்த தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டு உள்ளது.

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கிராமம் முழுவதும் அகற்றப்பட உள்ள ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள் தொடர்ந்து 503 வது நாட்களாக தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தற்போது விமான நிலையம் அமைக்க தேவையான நிலங்களை கையகப்படுத்த நிர்வாக அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

இது குறித்து தகவல் அறிந்த ஏகனாபுரம் கிராம மக்கள் பரந்தூர் விமானம் நிலையம் அமைப்பதற்கான நிலங்களை கையகப்படுத்த வெளியிட்டு உள்ள அரசாணையை தமிழ்நாடு அரசு ரத்து செய்யக்கோரியும் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட கோரியும் காலவரையற்று தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிப்பு செய்து வருகின்றனர்.

ஏகனாபுரம் கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மட்டுமே வந்துள்ள நிலையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளியில் பயிலும் 116 மாணவ மாணவிகள் யாரும் வராததால் பள்ளி வளாகமும், வகுப்பறைகளும், வெறிச்சோடி கிடக்கின்றது. மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்காக வழங்க காலை உணவு திட்டத்தின் கீழ் செய்து வைக்கப்பட்ட உணவுகளும் வீணாகிப் போனது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சமரசம் பேச வந்த கல்வித்துறை அலுவலர்களை கிராம மக்கள் சிறை பிடித்ததால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் அளித்த தகவலின் பெயரில் அங்கு வந்த டி.எஸ்.பி. தலைமையிலான காவல்துறையினர் தொடர்ந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அதன் பின் விடுவித்தினர்.

ஓரிரு.நாளில் கிராம இளைஞர்களை கொண்டு கல்வி தடையின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என கிராமத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News