நந்தன்கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நிதி ஒதுக்கிடு செயல்படுத்தக்கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-10 07:28 GMT
நந்தன்கால்வாய் பாதுகாப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டத்தில் சாத்தனூர் நந்தன் கால்வாய் இணைப்பு திட்டம் ரூ.309 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. மேற்படி திட்டத்துக்கு இந்த நிதி நிலை அறிக்கையில் நிதி ஒதுக்கிடு செயல்படுத்தக்கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம். நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் சார்பில் செஞ்சி தாலுகா அலுவலகம் எதிரில் நடைபெற்றது. இதற்கு கன்னிகா ரமேஷ் பாபு தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சித்துறை முன்னாள் உதவி இயக்குனர் அறவாழி வரவேற்றார். நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்க துணைத்தலைவர் சேகர், செயலாளர்கள் கார்த்தி, வெற்றிச் செல்வன், சங்கர், துரைமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காங்கிரஸ் வட்டார தலைவர் வக்கீல் சக்திவேல், நகர தலைவர் சூரியமூர்த்தி, விவசாய அணி ஜோலாதாஸ், கரும்பு விவ சாயிகள் சங்க மாநில நிர்வாகி குண்டு ரெட்டியார், கணக்கன்குப்பம் முருகன், பத்து ரூபாய் சங்கம் செம்மேடு ரமேஷ், மகளிர் அணி புஷ்பாசேகர் உள்பட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டனர். முடிவில் செஞ்சி தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.