திருப்பூரில் அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திருப்பூர் குமரன் சிலை அருகே அதிமுக மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
Update: 2024-02-01 07:55 GMT
திருப்பூர் குமரன் சிலை அருகே அதிமுக மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்லாவரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் வீட்டில், பட்டியலின மாணவி கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து, திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில் குமரன் சிலை முன்பு முன்னாள் துணை சபாநாயகரும், திருப்பூர் மாநகர மாவட்ட கழகச் செயலாளர் பொள்ளாச்சி.வி. ஜெயராமன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது . இதில் திருப்பூர் வடக்கு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், புரட்சித் தலைவி அம்மா பேரவை இணைச் செயலாளருமான குணசேகரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் நடராஜன், பழனிச்சாமி உட்பட அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் பங்கேற்று உள்ளனர்.