மயிலாடுதுறை அருகே இணைப்புச் சாலை வேண்டி போராட்டம் .
மயிலாடுதுறை அருகே 200 மீட்டர் தூர இணைப்புச் சாலை வேண்டி சாலையில் நாற்று நட்டு போராட்டம் .
By : King 24x7 Website
Update: 2023-11-26 17:11 GMT
மயிலாடுதுறை அருகே, ஈஸ்வரன்கோவில் கிராமத்தில், 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மயிலாடுதுறை தரங்கம்பாடி ஆகிய, இரண்டு தாலுகாக்களையும் ஈஸ்வரன் கோவில், குளிச்சார் கிராமங்கள் இணைக்கின்றன . 200மீ. சாலையை மட்டும், 60 ஆண்டுகளுக்கு மேலாக , செப்பனிடப்படாததால், மண் சாலையாக உள்ளது. மழைக்காலங்களில் சேரும் சகதியுமாகிவிடுவதால், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சேரும் சகதியமான சாலையில் . சைக்கிளை, கையில் தூக்கிக்கொண்டு நடந்து சென்று, சாலையை கடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குளிச்சாறு, கிராமத்திலிருந்து, ஆறுபாதி கிராமத்தில் உள்ள, பள்ளிக்கு, வரும் மாணவர்கள், சேற்றில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. போர்க்கால அடிப்படையில், சாலையை செப்பனிட்டு தர, சாலையில், நாற்று நட்டு தங்களது எதிர்ப்பைகாட்டினர்.