தையல் இயந்திரம் கேட்டு போராட்டம்

வந்தவாசி அருகே தையல் இயந்திரம் கேட்டு ஊர்வலம் - மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.

Update: 2024-02-21 06:24 GMT

தையல் இயந்திரம் கேட்டு போராட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சென்னாவரம் பகுதியில் இருந்து வட்டார வளர்ச்சி அலுவலகம் வரை பயிற்சி பெற்ற தையல் கலைஞர்கள் தையல் இயந்திரம் கேட்டு கடந்த 2022 ஆம் ஆண்டு 42 பேர் சமூகநலத்துறைக்கு கோரிக்கை மனு அளித்திருந்தனர். ஆனால் இதுவரை தையல் இயந்திரம் வழங்கப்படவில்லை எனக் கூறி ஊர்வலமாக சென்று துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவரதனிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். மனு மீது மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News