வாணியம்பாடியில் நகோட்டாச்சியர் அலுவலகம் முன்பு போராட்டம்
வாணியம்பாடியில் வீடுகளுக்கு பட்டா வழங்ககோரி கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு வாக்காளர் அடையாள அட்டையை வீசி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
நீர்நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த ஓராண்டிற்கு முன்பு திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நூருல்லாபேட்டை பகுதியில் ஏரிக்கால்வாயை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 45 வீடுகளை மாவட்ட நிர்வாகம் அப்புறப்படுத்திய, அவர்களுக்கு மாற்று இடத்தில் பட்டா வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
அதனை தொடர்ந்து 6 பேருக்கு மட்டும் மாவட்ட நிர்வாகம் பட்டா வழங்கியுள்ளாதகவும், மீதமுள்ள நபர்களுக்கு மாவட்ட நிர்வாகம் இதுவரையிலும், பட்டா வழங்கவில்லையெனவும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும், அதிகாரிகள் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையென கூறி 40க்கும் மேற்பட்டோர் வாணியம்பாடி கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு வாக்காளர் அடையாள அட்டை வீசி, இனி ஓட்டு போடுவதில்லையென கூறி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம், வாணியம்பாடி நகர காவல்துறையினர் மற்றும், வருவாய்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு, இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தின் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்... இதனால் கோட்டாச்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது..