ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

நத்தம் ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2024-03-13 11:57 GMT

போராட்டம் 

திண்டுக்கல் மாவட்டம்,நத்தம் ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு நத்தம் கிளை வட்டாரத் தலைவர் சுதர்சன் தலைமை தாங்கினார். செயலாளர் உக்கிரபாண்டி, இணை செயலாளர் ராஜேஸ் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மகுடபதி கலந்து கொண்டு பேசியதாவது.

இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் தீனதயாளன் அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளதுடன் புறம்பான பணிகளை மேற்கொள்ள தொழில்நுட்ப அனுமதி பெற்றுத்தரச் சொல்லும் அவர் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து அவருக்கெதிராக கோஷம் எழுப்பினர். இதில் இச்சங்கத்தைச் சேர்ந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்ட அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News