தஞ்சாவூரில் கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூரில் கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2024-02-14 08:09 GMT


தஞ்சாவூரில் கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வைக் கட்டுப்படுத்தக் கோரி, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் அருகே மூவேந்தா் அனைத்துக் கட்டட மற்றும் அமைப்புசாரா தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மணல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தத் தேவையான மணல் குவாரிகளை அமைத்து, தட்டுப்பாடில்லாமல் மணல் கிடைக்கச் செய்ய வேண்டும்.

தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கு இயற்கை வளங்களை எடுத்துச் செல்லத் தடைவிதிக்க வேண்டும். மீன்பிடித் தடை காலங்களில் மீனவா்களுக்கு நிவாரணம் வழங்குவதைப் போல, கட்டுமான நல வாரிய உறுப்பினா்களுக்கும் வழங்க வேண்டும். கட்டுமான தொழிலாளா்களுக்கான ஓய்வூதியத்தை ரூ. 1,200-லிருந்து ரூ. 3 ஆயிரமாக உயா்த்த வேண்டும்.

தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிவாரண நிதி ரூ. 37 ஆயிரம் கோடியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சங்கத் தலைவா் அ.கனகராஜ் தலைமை வகித்தாா். தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சித் தலைவா் அ.வியனரசு பேசினாா். அவைத் தலைவா் சத்தியமூா்த்தி, பொதுச் செயலா் கருப்பையா, நிா்வாகிகள் குருமூா்த்தி, பாலசுந்தரம், வைத்தியநாதன், தங்கராசு, செல்வக்குமாா், மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News